பாபா நோன்யா சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்த சிங்கப்பூர் அதிபர்!

Photo: President Of Singapore Official Facebook Page

சிங்கப்பூரில் நேற்று (20/11/2021) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், 33- வது பாபா நோன்யா சர்வதேச மாநாட்டை (33rd Baba Nonya International Convention) மூன்று முறை மணியடித்து தொடங்கி வைத்தார்.

சிங்கப்பூரில் மேலும் 1,931 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

இது குறித்து அதிபர் ஹலிமா யாக்கோப் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இன்று (20/11/2021) காலை, 33- வது பாபா நோன்யா சர்வதேச மாநாட்டை நான் துவக்கி வைத்தேன். இது பெரனாகன் கலாச்சாரத்திற்கான (Peranakan culture) விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஸ்டெல்லா கோன் (Stella Kon) எழுதிய “எமிலி ஆஃப் எமரால்டு ஹில்” (Emily of Emerald Hill) புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட “தி மேட்ரியார்க்ஸ்” (The Matriarchs) என்ற நகைச்சுவை மற்றும் ஏக்கம் நிறைந்த நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்தேன். இந்த நாடகத்தில் உள்ளூர் பெரனாகன் நடிகர்களான இவான் ஹெங் (Ivan Heng) மற்றும் ஜிடி லை (GT Lye) ஆகியோர் நடித்தனர். மேலும், இதனை ஆல்வின் டான் (Alvin Tan) இயக்கியுள்ளார்.

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமரைச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர்கள்!

நாடகம் மற்றும் மாநாட்டின் மூலம் பெரனாகன் கலாச்சாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதைக் கண்டது மனதிற்கு இதமாக இருந்தது. நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நமது அடையாளத்தின் முக்கிய அம்சங்களாகும், அவற்றைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்போம், எதிர்கால சந்ததியினருக்கு அவற்றைக் கொடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.