சிங்கப்பூரில் வங்கி தொடர்புடைய மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட 35 பேர் அதிரடி கைது.!

Pic: SPF

சிங்கப்பூரில் உள்ள OCBC, HSBC, DBS, UOB மற்றும் Standard Chartered ஆகிய வங்கிகளுடன் சிங்கப்பூர் காவல்துறை இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) முதல் வெள்ளிக்கிழமை வரை 4 நாள் கூட்டு அமலாக்க நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை வங்கிகளுடன் இணைந்து 150க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களை முறியடித்துள்ளதாகவும், சுமார் 150க்கும் மேற்பட்ட முதலீடு, தொழில்முறை மோசடிச் சம்பவங்கள், தனிப்பட்ட மின்னணு அரசாங்கக் கடவுச்சொல் (SingPass) தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்செயல்கள் நடைபெற்றதாக கூறியுள்ளது.

சிங்கப்பூரில் Work permit அனுமதி பெற்ற CMP வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடி நீட்டிப்பு!

இதன் தொடர்பில், தீவு முழுவதும் அதிகாரிகள் தனித்தனியே அதிரடி சோதனை நடத்தி 6 பெண்கள் உட்பட 29 ஆண்களை கைதுசெய்தனர். காவல்துறையின் வணிக விவகார மோசடி எதிர்ப்பு நிலையம் 5 உள்ளூர் வங்கிகளுடன் இணைந்து இந்த மோசடி வழக்குகள் குறித்து கண்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 255 பேர் சுமார் 31 மில்லியன் வெள்ளி மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பணமோசடி, ஏமாற்று வேலை, உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை இயக்குதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DBS வங்கியில் 3 போலி S$10,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற சம்பவம் – சுதாகரித்துக் கொண்ட ஊழியர்