சிங்கப்பூரில் Work permit அனுமதி பெற்ற CMP வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடி நீட்டிப்பு!

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் உள்ள Work permit அனுமதி பெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடி ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

CMP துறைகளில் உள்ள தற்போதைய வெளிநாட்டு ஊழியர் லெவி என்னும் வரி தள்ளுபடி மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும், அதாவது ஏப்ரல் மற்றும் மே மாதம் முறையே S$250 மற்றும் ஜூன் மாதத்திற்கு S$200 என தள்ளுபடி செய்யப்படும்.

சிங்கப்பூரில் 20 ஆண்டுகள் கடும் உழைப்பு.. கட்டுமான ஊழியராக வந்தவர், இன்று 7 கடைகளுக்கு முதலாளி – பிரம்மிக்க வைக்கும் தமிழரின் வாழ்க்கை

இந்த அறிவிப்பை தேசிய வளர்ச்சி மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) வெளியிட்டது.

சிங்கப்பூரில் நிலவிய தொடர் மனிதவள பற்றாக்குறை மற்றும் அதிக வர்த்தக செலவுகளின் அழுத்தங்களை கட்டுப்படுத்த உதவும் வகையில் பல ஆதரவு நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டது, அதன் ஒரு பகுதி இதுவாகும்.

இதில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தள்ளுபடியும் அடங்கும். இந்த சலுகை திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது,

தொற்றுநோயால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் வர்த்தகங்களுக்கு உதவும்வகையில் இது அமைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வெளி இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை – மகிழ்ச்சியில் நிம்மதி பெருமூச்சு விடும் சில வெளிநாட்டு ஊழியர்கள்!