சிங்கப்பூரில் வெளி இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை – மகிழ்ச்சியில் நிம்மதி பெருமூச்சு விடும் சில வெளிநாட்டு ஊழியர்கள்!

Work permit foreign workers Construction company
Pic: Today/File

சிங்கப்பூரில் வரும் மார்ச் 29 முதல், வெளி இடங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமாக இருக்கும், அதாவது கட்டாயம் இல்லை.

வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமானது என்றாலும், உள் இடங்களுக்குள் (Indoors) முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று திரு லீ கூறினார்.

சிங்கப்பூரில் 20 ஆண்டுகள் கடும் உழைப்பு.. கட்டுமான ஊழியராக வந்தவர், இன்று 7 கடைகளுக்கு முதலாளி – பிரம்மிக்க வைக்கும் தமிழரின் வாழ்க்கை

பேருந்து மற்றும் ரயில்கள், உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகள், கடைத்தொகுதிகள், ஈரச்சந்தைகள் உள்ளிட்டவை உட்புற இடங்களில் அடங்கும்.

அதேபோல், பூங்காக்கள், திடல்கள், இயற்கை வனப் பாதைகள், திறந்தவெளி நடைபாதைகள், மேம்பாலங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஆகியவை வெளிப்புற இடங்களில் அடங்கும்.

வெளிப்புற முகக்கவசம் கட்டாயமில்லை என்ற அறிவிப்பு சில துறை வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சொல்லப்போனால், கட்டுமான ஊழியர்கள் அதிக நேரம் வெயிலில் வேலை பார்க்கின்றனர், அவர்களுக்கு முகக்கவசம் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக ஒரு கருத்து இருந்து வருகிறது.

எனவே, இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதி பெருமூச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த 3 வெளிநாட்டு ஊழியர்கள்… விதிகள் மீறப்பட்டது தான் காரணம் – அறிக்கை