துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த 3 வெளிநாட்டு ஊழியர்கள்… விதிகள் மீறப்பட்டது தான் காரணம் – அறிக்கை

Tuas explosion workers identified
(Photo via itsrainingraincoats)

துவாஸில் அமைந்துள்ள தொழிற்சாலையில் கடந்த 2021 பிப்ரவரி 24ஆம் தேதி ஏற்பட்ட கொடூர வெடிப்பில் தமிழர் உட்பட 3 வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

வெடித்த Mixer இயந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பான பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக விசாரணை குழு நேற்று (மார்ச் 25) தெரிவித்துள்ளது.

பயனியர் சாலை நார்த்தில் லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் இருக்கையில் சிக்கியவர் (வீடியோ) மருத்துவமனையில் அனுமதி

வேலையிடத்தில் பாதுகாப்பு விதிமுறை, சுகாதார பாதுகாப்பு சட்ட்டத்துக்கு கட்டுப்படாமல் விதிகள் மீறப்பட்டிருக்கலாம் என விசாரணை குழு தலைவர் மூத்த மாவட்ட நீதிபதி ஓங் ஹியன் சன் கூறியுள்ளார்.

அதே போல, ஸ்டார்ஸ் இன்ஜினியரிங் நிறுவன இயக்குனர் திரு சுவா மற்றும் நிர்வாகி திரு லிவின் ஆகியோர் விதி மீறி இருக்கலாம் என நீதிபதி ஓங் குறிப்பிட்டார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கை, அரசு வழக்கறிஞர்களுக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை ஆராய்ந்து வருகின்றனர்.

துவாய் வெடிப்பு தொடர்பான செய்திகள்:

துவாஸ் தீ விபத்து: 3 ஊழியர்கள் உயிரிழப்பு – 5 பேர் ஆபத்தான நிலையில் அனுமதி

சிங்கப்பூர் துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த இந்திய ஊழியர்… நிதி திரட்டும் முயற்சி

துவாஸ் விபத்து: “இறந்த மாரிமுத்துவுக்கும் எனக்கும் இடையிலான உறவு மிக சிறந்த ஒன்று ” – கண்ணீர் விட்ட முதலாளி

துவாஸ் வெடிப்பில் சிக்கிய தான், 2 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாக ஊழியர் சாட்சியம்!

துவாஸ் வெடிப்பு: இயந்திர குறைபாடு குறித்து ஊழியர்கள் முன்பே புகார் செய்தனர்