சிங்கப்பூர் துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த இந்திய ஊழியர்… நிதி திரட்டும் முயற்சி

Tuas Explosion
(PHOTO: It's Raining Raincoats/Facebook)

சிங்கப்பூர் துவாஸ் வெடிப்பில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர், அதில் ஒருவர் 38 வயதான இந்திய நாட்டை சேர்ந்த மாரிமுத்து என்று ItsRainingRaincoats அமைப்பு தெரிவித்துள்ளது.

மாரிமுத்து குடும்பத்திற்கு உதவும் நோக்கில் நிதிதிரட்ட, Give.asia தளத்தில் அதற்கான பக்கத்தை அந்த அமைப்பு தொடங்கியுள்ளது.

நார்த் பிரிட்ஜ் சாலையில் கட்டடத்தின் லிப்டில் சிக்கிய ஊழியர் மரணம்

சிங்கப்பூரில் வேலை

சிங்கப்பூரில் கடந்த 12 ஆண்டுகளாக மாரிமுத்து வேலை செய்து வந்துள்ளார், கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த அவர், குடும்பத்தின் மூத்த மகன்.

பாதிக்கப்பட்ட மற்ற ஊழியர்களைப் போலவே மாரிமுத்தும் தனது சொந்த ஊரை விட்டு சிங்கப்பூரில் வேலைக்கு வந்து, தனது குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துத்தருவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.

இரண்டாவது மகளை பார்க்கவில்லை

இந்தியாவில் கடைசியாக 2019ஆம் ஆண்டு குடும்பத்தாருடன் அவர் இருந்துள்ளார். பிறந்து 10 மாதங்கள் ஆன தன்னுடைய இரண்டாவது மகளை பார்க்காமலே அவர் இறைவனடி சேர்ந்தது நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது.

அவரது மனைவி, ராஜபிரியா (வயது 28), தற்போது தனது வயதான தாய் மற்றும் இரண்டு மகள்களுடன் (5 வயது ரியா ஸ்ரீ மற்றும் புதிதாக பிறந்த லித்திஷா) குடும்ப சுமையை சுமக்க உள்ளார்.

Photo: give.asia website
Photo: give.asia website

மாரிமுத்து தம்பியும் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோரிக்கை

“மாரிமுத்து நல்ல மனிதர், உதவும் குணம் படைத்தவர்” என்றும் சக ஊழியர்கள் அவரை பற்றி கவலையுடன் கூறினர்.

தன் கணவரின் சடலத்தைக் விரைவில் சொந்த பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு அவரது மனைவி கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் என்ன உதவி செய்தாலும் அவரின் இழப்பு அவரின் குடும்பத்தார்க்கு மிகப்பெரிய இழப்பு, பிஞ்சி குழந்தையின் முகத்தை பார்க்கும் போது நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது…

துவாஸ் வெடிப்புச் சம்பவம் – 2004ஆம் ஆண்டுக்கு பிறகு விசாரணை குழு…