துவாஸ் வெடிப்பு: இயந்திர குறைபாடு குறித்து ஊழியர்கள் முன்பே புகார் செய்தனர்

Tuas fire Foreign workers
(Photo: SCDF/ Facebook)

இந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று துவாஸ் தொழிற்பேட்டை கட்டடத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது நாம் அறிந்த தகவல் தான்.

ஆனால் அதற்கு முன்பே, சம்பவம் நடந்த இயந்திரத்தில் தீ, எண்ணெய் கசிவு மற்றும் புகை போன்ற குறைபாடுகள் இருப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்திய இனத்தவரை இன ரீதியாக பேசி, உதைத்து காயப்படுத்திய ஆடவர் மீது குற்றச்சாட்டு

இந்த இயந்திரத்தை பாதித்த சிக்கல்களின் விவரங்கள், Stars Engrg நிறுவன பட்டறையில் நடந்த வெடிப்பு குறித்து விசாரணைகுழு நடத்திய விசாரணையின் முதல் நாளில் தெரிய வந்தது.

இயந்திரம் இயக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஊழியர்கள் அந்த பிரச்சினைகளைப் பற்றி புகாரளிக்கத் தொடங்கினர். ஆனால் அதற்கு முன் குறைந்தது மூன்று முறையாவது இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இயந்திரத்தில் எண்ணெய் குறைந்ததாக உரிமையாளர் மற்றும் துவாஸ் தளத்தில் உற்பத்தியின் ஒட்டுமொத்த பொறுப்பாளர் திரு சுவா ஜிங் டாவிடம் ஊழியர்களில் ஒருவர் கூறினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, துவாஸ் அவன்யூ 11இல் அமைந்துள்ள தொழிற்பேட்டை விபத்து சம்பவத்தில், இந்தியாவை சேர்த்த மாரிமுத்து, வங்காளதேசத்தை சேர்த்த சொஹைல் எம்டி, அனி சுஸமான் முகமத் ஆகிய மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

மேலும், துவாஸில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இணையம் வழி திரட்டப்பட்ட S$608,302 பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அழகு, மசாஜ் நிலையங்களில் பாலியல் சேவை வழங்கிய பெண் ஊழியர்கள் – உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு