இந்திய இனத்தவரை இன ரீதியாக பேசி, உதைத்து காயப்படுத்திய ஆடவர் மீது குற்றச்சாட்டு

Photo : Singapore Police

இந்திய இனத்தைச் சேர்ந்த பெண்ணை இன ரீதியாக அவமதித்ததாக ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையின்படி; வோங் ஜிங் ஃபாங் என்ற 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் தாமாக முன்வந்து, ஹிண்டோச்சா நிதா விஷ்ணுபாய் என்ற பெண்ணை வேண்டுமென்றே இனரீதியான பேசி தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

அழகு, மசாஜ் நிலையங்களில் பாலியல் சேவை வழங்கிய பெண் ஊழியர்கள் – உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு

இந்த சம்பவம் கடந்த மே 7 அன்று காலை 8:45 மணியளவில், சோவா சூ காங் டிரைவ் வழியாக நார்த்வேல் காண்டோமினியம் அருகே உள்ள நடைபாதையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

வோங், கடந்த மே 7 அன்று தனது வலது காலை பயன்படுத்தி 55 வயதான நிதாவை நெஞ்சிப்பகுதியில் உதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அவரை இனரீதியாக அவதூறாக பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

நிதா நடைபாதையில் வேகமாக நடந்து சென்றபோது, ​​வோங் அவரை தடுத்துள்ளார். அந்த நேரத்தில், நிதா நடை பயிற்சி செய்ததால் வியர்வையை வழிந்துள்ளது, அதனால் நிதா முகக்கவசத்தை கன்னத்தில் கீழ் மாட்டிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, நிதாவின் முகக்கவசத்தை மேலே இழுக்குமாறு வோங் கூச்சலிட்டார். நிதா உடற்பயிற்சி செய்ததை விளக்கிய பிறகும் அவர் நிதாவை மோசமாக பேச ஆரம்பித்துள்ளார்.

இந்த சலலப்பை தவிர்ப்பதற்காக, நிதா விலகிச் செல்ல முயன்றார், ஆனால் வோங் நிதாவை நோக்கி ஓடிவந்து மார்பில் உதைந்துள்ளார்.

இதனால் தடுமாறிய நீதா கீழே விழுந்தார், இதனால் நிதாவின் இடது கையில் சிராய்ப்புகள் மற்றும் வெட்டுக்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், வேண்டுமென்றே இனரீதியான பேசி தாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் – மலேசியா