அழகு, மசாஜ் நிலையங்களில் பாலியல் சேவை வழங்கிய பெண் ஊழியர்கள் – உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

ஸ்பா அழகு நிலையம் மற்றும் மசாஜ் நிலையம் ஆகிய இரண்டு நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது பாலியல் சேவை தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை (செப். 21) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்கள் நிறுவன ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் சேவைகளை வழங்கவில்லை என்பதை அந்த உரிமையாளர்கள் உறுதிப்படுத்த தவறியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் – மலேசியா

இதில் 37 வயதான ஜிம்மி சூ சூன் க்வோக், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், 100 டர்ஃப் கிளப் சாலையில் உள்ள டபிள்யூ வெல்னஸ் ஸ்பாவில் மூன்று பெண் ஊழியர்களை கொண்டு நிறுவனத்தை நடத்தியது தொடர்பாக மசாஜ் நிறுவன விதிகளின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சூயின் குற்றப்பத்திரிகைகளின்படி, கடந்த ஏப்ரல் 20 அன்று மாலை 5.48 மணிக்கு, ஆண் வாடிக்கையாளர் ஒருவருக்கு சுயஇன்ப சேவை வழங்க S$50 கூடுதலாக பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

அதே போல, கடந்த ஆகஸ்ட் 10 அன்று பிற்பகல் 3.25 மணியளவில், மற்றொரு வாடிக்கையாளர் இதற்காக முன்வந்தாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே நாளில், மூன்றாவது ஊழியர் பல பாலியல் சேவைகளை வழங்கியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. சூ அடுத்த மாதம் குற்றத்தை ஒப்புக்கொள்ள உள்ளார்.

மற்றொரு உரிமையாளர்

அதே போல, 48 வயதான கோ சி யுவானுக்கு ஆகஸ்ட் மாதம் ரிவர் வேலி சாலையில் உள்ள பேலஸ் ஸ்பாவில் தனது ஊழியர் பாலியல் சேவைகளை வழங்கவில்லை என்பதை உறுதி செய்ய தவறியதாக ஒரு குற்றச்சாட்டு வழங்கப்பட்டது.

கோவிட்: சிங்கப்பூரில் மேலும் இருவர் மரணம்