முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் – மலேசியா

(Photo: Yong Jun Yuan/TODAY)

மலேசியா செல்லும் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், இனி சுகாதார அமைச்சின் இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ள புதிய போர்ட்டல் வழியாக இன்று (செப். 21) முதல் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த எளிமைப்படுத்தப்பட்ட வீட்டு தனிமைப்படுத்தல் விண்ணப்ப செயல்முறை, இன்று காலை 8 மணி முதல் நடப்பில் வரும் என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.

கோவிட்: சிங்கப்பூரில் மேலும் இருவர் மரணம்

நேற்று திங்களன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர், மலேசியாவின் எல்லைகளை மீண்டும் பாதுகாப்பாக திறக்கும் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, நாட்டுக்குள் வரும் பயணிகளுக்கான தேவையை மேம்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

இந்த புதிய நடவடிக்கை, ஹோட்டல் வசதிகளில் தனிமைப்படுத்தலுக்கு ஆகும் பண செலவை மிச்சப்படுத்த உதவுவதாக அமைந்துள்ளது.

இதன் மூலம் அதிகமான மலேசியர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் தங்கள் வீடுகளில் அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் ஏராளமான மலேசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தனிமைக்காக ஆகும் செலவை கணக்கில் கொண்டு சொந்த நாட்டிற்கு திரும்ப தயக்கம் காட்டினர்.

மேலும், மலேசியர்கள் பலர் வீட்டு தனிமைக்காக வேண்டி பல்வேறு கோரிக்கையும் முன் வைத்தனர்.

தற்போதைய இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி விலக்கு தள்ளுபடி இவ்வாண்டு இறுதி வரை நீட்டிப்பு.!