துவாஸ் வெடிப்பில் சிக்கிய தான், 2 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாக ஊழியர் சாட்சியம்!

Tuas explosion
(Photo: MWC/Facebook)

2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி துவாஸில் உள்ள தொழிற்சாலையில் நடந்த வெடிப்பில் 3 வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நடைபெறும் பொது விசாரணையில், வெடிப்பின் தாக்கத்தால், 2 மீட்டர் துாரத்துக்குத் துாக்கியெறியப்பட்டதாக ஊழியர் ரஹாட் அஸ்ஃபாக்குஸ்மான் (வயது 30) தெரிவித்தார்.

கோவிட்-19 தாெற்று காலத்தில் பெரிதும் உதவிய முதலாளிகள் & பணிப்பெண்களுக்கு விருது!

மேலும் காயமடைந்த 4 ஊழியர்களில் ஒருவரான இவர், இந்த வெடிப்பு சம்பவத்தால், தாம் இன்னமும் கெட்ட கனவுகளைக் காண்பதாகவும், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் பொது விசாரணையில் கூறியுள்ளார்.

தாெழிற்சாலையில் வெடிப்பு நிகழ்ந்த பிறகு எழுந்து நின்ற ரஹாட் அஸ்ஃபாக்குஸ்மான், தம் மீது தீ பற்றியிருந்ததையும், தமது சட்டை எரிந்து போய்விட்டதையும் உணர்ந்து, சட்டையை உடனடியாகப் கழட்டி எரிந்ததாகக் தெரிவித்தார்.

தீ பற்றி தம் உடல் கருகியிருப்பதை கண்டதாகவும், வாயிலிருந்து ரத்தம் வெளிவருவதை அறிந்ததாகவும் ரஹாட் விசாரணையில் விளக்கினார்.

தான் அழும்பாேது கண்ணீர் வரவில்லை. பகல் நேரத்தில் கூட தெளிவாக எதுவும் தெரிவதில்லை என துயரத்துடன் தெரிவித்தார் ரஹாட்.

மேலும் விசாரணையின் போது ரஹாட்டின் முகத்தில் வடுக்கள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

துவாஸ் வெடிப்பில் காயமடைந்த ஊழியர்களின் துயரம் விசாரணையில் தெரியவந்தது!