கோவிட்-19 தாெற்று காலத்தில் பெரிதும் உதவிய முதலாளிகள் & பணிப்பெண்களுக்கு விருது!

Singapore SCDF Life savers
(Photo Credit : SCDF)

கோவிட்-19 தாெற்று காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையால், சிங்கப்பூரில் கடந்த 18 மாதங்களாக பல பேர் தங்களது வீட்டிலிருந்து வேலை செய்யும் கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

இந்நிலை முதலாளிகள் மற்றும் பணிப்பெண்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது.

இறுதி ஊர்வலத்தின்போது சட்டவிரோத கோஷம் எழுப்பிய சந்தேக ஆடவர் கைது

இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையிலும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக செயலாற்றிய முதலாளிகளையும், பணிப்பெண்களையும் அங்கீகரிக்கும் வகையில் ஒரு புதிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட் என்னும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் சமூக ஆதரவு பயிற்சி சங்கம், சிறந்த முதலாளி மற்றும் சிறந்த வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் என அவர்களை சிறப்பிக்கும் விதமாக இவ்விருதுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளைச் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் இந்த மாதம் 30ஆம் தேதி ஆகும். இந்த விருதுகளுக்கான பரிந்துரைகள் கடந்த ஜூலை 17ஆம் தேதியே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரங்கள், நவம்பர் 21ஆம் தேதியன்று நடக்கும் ஃபாஸ்ட் அமைப்பின் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண், முதலாளி 2021 நிகழ்ச்சியன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவாஸ் வெடிப்பில் காயமடைந்த ஊழியர்களின் துயரம் விசாரணையில் தெரியவந்தது!