இறுதி ஊர்வலத்தின்போது சட்டவிரோத கோஷம் எழுப்பிய சந்தேக ஆடவர் கைது

வெளிநாட்டு ஊழியரை

கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி நடந்த இறுதி ஊர்வலத்தில், சட்டவிரோத குழுவின் உறுப்பினர் என சந்தேககிக்கப்படும் 41 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இந்த இறுதி ஊர்வலம், பூன் கெங் மற்றும் வாம்போவா அருகிலுள்ள பிளாக் 114 மெக்நாயர் (McNair) சாலையில் நடந்தது.

விபத்தில் இறந்த வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பத்துக்கு தொடர்ந்து முழு சம்பளம் வழங்கி வரும் முதலாளி

அந்த ஊர்வலத்தின் போது ஆடவர் சட்டவிரோத குழு தொடர்புடைய கோஷத்தை முழங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

கூடுதலாக, பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கை மீறல்கள் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளின்கீழ், ஒரு நேரத்தில் 30 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர்.

மேலதிக காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் தொடரும் உயிரிழப்பு – மேலும் 5 பேர் மரணம்