துவாஸ் வெடிப்பில் காயமடைந்த ஊழியர்களின் துயரம் விசாரணையில் தெரியவந்தது!

Tuas fire Foreign workers
(Photo: SCDF/ Facebook)

துவாஸிலுள்ள தொழில்துறை கட்டடத்தில் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டபோது ஆலையில் இருந்த ஊழியர்களில் 8 பேர் அலறியபடி பக்கத்தில் இருந்த மைதானத்திற்கு ஓடியுள்ளனர்.

அங்கு அதிகளவில் தீக்காயங்கள் ஏற்பட்டு கதறிய ஊழியர்களின் மீது, மற்ற பிரிவுகளில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள் தண்ணீரை பாய்ச்சி காயப்பட்ட ஊழியர்களை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தனர்.

லாரி, கார் மோதிய விபத்து – உயிரிழந்த ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்

32இ துவாஸ் அவென்யூ 11ல், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று வெடிப்பு விபத்து நேர்ந்தது.

இந்த வெடிப்பு சம்பவத்தினால் ஏற்பட்ட மிக கொடுமையான நிலையை, காயமடைந்த ஊழியர்களில் ஒருவரான திரு. ஹொசேன் ஜித்து (வயது 32) விசாரணைக் குழுவின் முன்னிலையில் தெரிவித்தார்.

திரு.ஜித்து நீதிமன்றத்தில் இருக்கும் போது, முகக்கவசம் அணிந்திருந்த நிலையிலும் அவரின் முகத்தில் பல்வேறு பகுதிகளில் தீக்காயங்களின் தழும்புகள் காணப்பட்டன.

தனது கண்களுக்குக் கீழ் உள்ள தோல் பகுதி எரிந்துவிட்டதாகவும், அதனால் விபத்திற்கு பின் தன்னால் கண்களை மூட முடியவில்லை என்றும், சரியாக தூங்க முடியவில்லை என்றும் திரு.ஜித்து துயரத்துடன் தெரிவித்தார்.

மேலும், அவர் மூச்சு விடுவதற்கும் சிரமப்படுவதாகக் கூறினார். திரு.ஜித்து அவர்களின் உடலில் 54 விழுக்காட்டுப் பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

துவாஸ் வெடிப்பில் மோசமான தீக்காயங்கள் அடைந்த திரு. ஷோஹெல் முகமது (வயது 23), திரு. அனிசுஸ்ஸாமான் முகமது (வயது 29), திரு. சுப்பையன் மாரிமுத்து (வயது 38) ஆகியோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலையில் உள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுகளினால் விபத்து நேர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வெடிப்பு ஏற்பட்ட போது கிட்டதட்ட 7 பேர் காயமுற்றுள்ளனர்.

ஸ்டோர்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

எண்ணெய்யைச் சூடாக்கிய போது, அந்த இயந்திரத்தின் வெப்பநிலை சரியாக கண்காணிக்கப்படவில்லை என நிறுவனத்தின் இயக்குநரான திரு. சுவா சிங் டா தெரிவித்தார்.

அந்த இயந்திரத்தை ஏறத்தாழ 1 மணி நேரம் இயக்கியதற்கு பின், அந்த இயந்திரத்திலிருந்து சத்தம் வருவதைக் கேட்டதாக திரு. ஜித்து கூறினார். இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்தியதற்கு பின்பும் சத்தம் கேட்டதாக அவர் கூறினார்.

தொழிற்சாலையில் வெடிப்பு ஏற்பட்டதால் மயக்கமடைந்த திரு.ஜித்து, சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

உணவுக்கழிவுகளைக் கொடுப்பவர்களுக்கு ‘Green Currency’- ஐ வழங்கிய நிறுவனம்!