லாரி, கார் மோதிய விபத்து – உயிரிழந்த ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்

Tank driver uspected heart attack
Singapore Road Accidents/FB

76 வயதான டேங்கர் ஓட்டுநர், பசீர் பஞ்சாங் நோக்கி செல்லும் வெஸ்ட் கோஸ்ட் சாலையில் நடந்த விபத்தில் இறந்தார்.

இந்த சம்பவத்தின் படங்கள் மற்றும் வீடியோக்கள் ஃபேஸ்புக் வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டன.

விபத்தில் இறந்த வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பத்துக்கு தொடர்ந்து முழு சம்பளம் வழங்கி வரும் முதலாளி

இந்த சம்பவத்தால் சிதைந்த பேருந்து நிறுத்த அடையாள பலகையையும் சாலையின் ஓரத்தில் காணலாம்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின்படி, 301 வெஸ்ட் கோஸ்ட் சாலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் டேங்கர் லாரி மோதியுள்ளது.

வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதால், லாரி கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது என சீன மொழி நாளிதழ் லியான்ஹே ஸோபாவோ தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (செப். 27) மாலை 6:12 மணியளவில் இந்த விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

லாரி ஓட்டுநர் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், அதன் பின்னர் அவர் இறந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்ற காயங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் தொடரும் உயிரிழப்பு – மேலும் 5 பேர் மரணம்