உணவுக்கழிவுகளைக் கொடுப்பவர்களுக்கு ‘Green Currency’- ஐ வழங்கிய நிறுவனம்!

File Photo

சிங்கப்பூரில் உணவுக்கழிவுகளைப் பயனுள்ள பொருள்களாக உருமாற்றிய 11 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அறைகலன், நூடல்ஸ் முதலியவையும் அந்தப் பொருள்களில் அடங்கும். இவ்விருதுகளுக்கு முதன்முறையாக தேசிய சுற்றுப்புற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு சேர்ந்த மொத்த குப்பையில், உணவுக்கழிவுகளின் விகிதம் மட்டும் 10 விழுக்காடு என்றது தேசிய சுற்றுப்புற அமைப்பு. ஆனால், அதில் 20 விழுக்காட்டுக்கும் குறைவான கழிவுகளே மறுபயனீடு செய்யப்பட்டன.

இறுதி ஊர்வலத்தின்போது சட்டவிரோத கோஷம் எழுப்பிய சந்தேக ஆடவர் கைது

விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர், “உணவுக்கழிவுகளின் அளவைக் குறைக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உணவுக்கழிவு அதிகரித்தால் அது வளங்களைப் பாதிக்கும்” என்றார்.

இந்த விருதுப் பெற்ற நிறுவனங்களில் ஒன்று ‘Otolith Enrichment’ ஆகும். இந்நிறுவனத்தின் திட்ட மேலாளர் கூறுகையில், “மக்கள் அவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் உணவுக் கழிவுகளை எடுத்து வருவார்கள். அந்த கழிவுகளை ‘Black Solder Fly Larvae’ பூச்சிகளுக்கு சாப்பாடாகக் கொடுப்போம். மூன்று வாரங்கள் கழித்து, அந்த பூச்சிகளை மீன்களுக்கு உணவாகக் கொடுத்து, பூச்சிகளின் கழிவை உரமாகப் பக்கத்தில் உள்ள காய்கறித் தோட்டத்திற்கு பயன்படுத்துவோம்.

மக்கள் அவர்களின் உணவுக்கழிவுகளைக் கொடுக்கும் போது நாங்கள் அவர்களுக்கு ‘Green Currency’ கொடுப்போம். இந்த ‘Green Currency’- ஐ பயன்படுத்தி நாங்கள் வளர்த்த காய்கறிகளை அவர்களால் வாங்க முடியும்” என்றார்.

லாரி, கார் மோதிய விபத்து – உயிரிழந்த ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்

உணவுக் கழிவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அனுகூலங்கள் கிடைக்கும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.