துவாஸ் விபத்து: “இறந்த மாரிமுத்துவுக்கும் எனக்கும் இடையிலான உறவு மிக சிறந்த ஒன்று ” – கண்ணீர் விட்ட முதலாளி

Tuas fire Foreign workers
(Photo: SCDF/ Facebook)

துவாஸ் தொழில்துறைக் கட்டடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று ஏற்பட்ட வெடிப்பில் மூன்று ஊழியர்கள் மரணமடைந்தனர்.

வெடிப்பு ஏற்பட்ட Stars Engrg நிறுவனத்தின் முதலாளி, அது குறித்து விவரிக்கும் போது, கண்ணீர் விட்டு அழுதார், அதில் ஒருவர் வெறும் ஊழியர் மட்டுமல்ல அதற்கும் மேல், என்றும் கூறினார்.

டேங்கர் லாரி, கார் மோதி விபத்து: லாரி ஓட்டுநர் மரணம்

அந்த நிறுவனத்தின் ஒரே இயக்குனரான திரு சுவா ஜிங் டா, (வயது 37) இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும், மன ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று, 32E துவாஸ் அவென்யூ 11ல் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 10 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர், காயமடைந்தோரில் 3 ஊழியர்கள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துவாஸ் வெடிப்பு: இயந்திர குறைபாடு குறித்து ஊழியர்கள் முன்பே புகார் செய்தனர்

கண்ணீர் விட்ட முதலாளி

இதில், தமிழ்நாட்டை சேர்ந்த திரு மாரிமுத்து மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த திரு அனிசுஸ்ஸமான் (Anisuzzaman) மற்றும் திரு சொகைல் (Shohel) ஆகியோர் உயிரிழந்தனர்.

திரு சுவா, மூன்றாவது நாளாக நேற்று (செப்டம்பர் 27) விசாரணைக் குழு முன் சாட்சியம் அளித்தார். அவர் மனதில் நின்ற அந்த ஊழியர், உயிரிழந்த 38 வயதான திரு சுப்பையன் மாரிமுத்து என்று கூறினார்.

“மாரிமுத்துவுக்கும் எனக்கும் இடையிலான உறவு ஊழியர் மற்றும் முதலாளி என்பதை கடந்து மிக சிறந்த ஒன்று ” என்று அவர் கண்ணீருடன் கூறினார்.

3 ஊழியர்களின் உயிரை பறித்த துவாஸ் வெடிப்பு – பொது விசாரணை…

நம்பகமான ஊழியர்

“அவர் பல வருடங்கள் எனக்காக வேலை செய்தார் … அவரின் இறப்பு செய்தியால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.”

திரு மாரிமுத்து திரு சுவாவுடன் ஆறு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றினார், மேலும் அவர் ஒரு நம்பகமான மேற்பார்வையாளராக இருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

90 சதவிகித கடுமையான தீக்காயங்களால் இறந்த மூவரில் அவரும் ஒருவர் என்பது கண்ணீருடன் நாம் பகிரும் தகவல்.

மேலும் மற்ற இரண்டு ஊழியர்களின் இழப்பால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக திரு சுவா கூறினார்.

முழு சம்பளம்

இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்குவதாகவும், ஒவ்வொரு மாதமும் அவர்களின் முழு சம்பளத்தை அவர்களுக்கு அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

MRT ரயிலில் முகக்கவசம் அணியாமல் பயணியை தாக்கும் ஆடவர் – காணொளி