3 ஊழியர்களின் உயிரை பறித்த துவாஸ் வெடிப்பு – பொது விசாரணை…

SCDF

2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவாஸில் உள்ள தொழில்துறைக் கட்டடத்தில் வெடிப்பு நேர்ந்தது.

அந்நிகழ்விற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் பற்றியும் வரும் திங்கள்கிழமை நடைபெறும் முதற்கட்ட விசாரணையில் ஆராயப்படும் என மனிதவள அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Booster டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் திரு லீ.!

இந்த முதற்கட்ட விசாரணை அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறும்.

சம்பவ இடத்தைக் கண்டு ஆதாரம் திரட்டியது, முக்கிய சாட்சிகளை விசாரித்தது, தடயவியல் சோதனைகளை செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கண்ட விசாரணையில் இடம்பெற்றுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று துவாஸில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 10 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர், காயமடைந்தோரில் 3 ஊழியர்கள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து மேற்கொண்ட விசாரணையில் கண்டுபிடித்த தகவல், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், நிபுணர்கள் சாட்சியங்கள் ஆகியவை முதற்கட்ட விசாரணையில் சமர்பிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாெதுமக்களும் நீதிமன்ற விசாரணைக்கு நேரடியாகச் செல்லலாம். அரசு நீதிமன்றங்களின் 8ஏ நீதிமன்றத்தில் விசாரணை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இருப்பினும் கோவிட்-19 தாெற்றுக் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதால் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்கள் இருக்கக்கூடாது என்பது அவசியமானது.

இந்த மாதம் 20ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரையிலும், 27 ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 1ஆம் தேதி வரையிலும், அடுத்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரையிலும் நீதிமன்ற விசாரணை நடைபெறும்.

2ஆம் கட்ட நீதிமன்ற விசாரணை, வருகின்ற நவம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை நடைபெறும் என மனிதவள அமைச்சு தெரிவித்தது.

கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் ஆட்கள் தேவை… வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு!