கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் ஆட்கள் தேவை… வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு!

migrant worker jailed in singapore
(Photo: wsatlaw)

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட எல்லைக் கட்டுபாடுகளால், பல துறைகளில் பணியாளர்களின் தேவைகள் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம்.

கிட்டதட்ட 92,100 ஊழியர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் உட்பட மொத்தம் 20 குழுமங்கள் கண்காணிப்பில்…

சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகளால் கட்டுமானத்துறையிலும், உற்பத்தித்துறையிலும் ஊழியர்களின் அவசியம் அதிகரித்துள்ளது.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கையை விட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் 100:163 என்ற விகிதத்தில் வேலை வாய்ப்புகள் இருந்தன.

நிபுணத்துவச் சேவைகள், நிதிச் சேவைகள், காப்புறுதிச் சேவைகள், தகவல் மற்றும் தொடர்புத்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் பணியாளர்களுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து வந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பருவத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து 2.7 சதவீதமாக பதிவாகியுள்ளது. சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வேலையின்டமை விகிதம் தொடர்ந்து குறைந்து வந்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பருவத்துக்கு ஏற்ப கணக்கிடப்படும் நீண்டகால வேலையின்மை விகிதமும், 2020ஆம் ஆண்டு டிசம்பர் & 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1.1 சதவீதமாக இருந்தது. இந்தாண்டு ஜூன் மாதத்தில் 0.9 சதவீதமாக குறைந்துள்ளது.

புதிதான இந்த வேலைச் சூழலுக்கு ஏற்றவாறு, புதிய வாய்ப்புகளை அனைத்து வர்த்தகங்கள் & ஊழியர்கள் உபயோகப்படுத்திக் கொள்வதை, ஊழியர் சந்தையில் ஏற்பட்ட இந்த முன்னேற்றம் பிரதிபலிக்கிறது, என அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.

வர்த்தகங்கள் & ஊழியர்கள் தொடர்ந்து புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவதை, ஆதரிக்க முத்தரப்பு பங்காளிகளுடன் அரசும் இணைந்து செயலாற்றும் என அவர் கூறினார்.

சிங்கப்பூரில் தடுப்பூசி குறித்த நிலவரம் – இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது?