சிங்கப்பூரில் தடுப்பூசி குறித்த நிலவரம் – இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது?

Pic: REUTERS

கடந்த செப்டம்பர் 14 வரை, சிங்கப்பூரின் 81 சதவீத மக்கள் இரண்டு டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளைப் போட்டுகொண்டுள்ளனர்.

மேலும், 84 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுகொண்டுள்ளனர் என்றும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

சிங்கப்பூரில் புதிதாக 807 பேர் பாதிப்பு – தங்கும் விடுதியில் 34 பேருக்கு தொற்று உறுதி

தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் (Pfizer-BioNTech Comirnaty மற்றும் Moderna) மொத்தம் 8,881,071 டோஸ் தடுப்பூசிகளை சுகாதார அமைச்சகம் (MOH) வழங்கியுள்ளது.

அதாவது 4,561,574 தனி நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, 4,432,411 நபர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர் என்றும் MOH கூறியுள்ளது.

கூடுதலாக, உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டுப் பட்டியலில் (WHO EUL) அங்கீகரிக்கப்பட்ட 179,086 டோஸ் மற்ற தடுப்பூசிகளை 86,731 தனிநபர்களை போட்டுகொண்டுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களின் முதல் தொகுதி லிட்டில் இந்தியா சென்றனர் – எந்த விடுதியில் இருந்து தெரியுமா?