Booster டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் திரு லீ.!

Pmlee received booster vaccine
Pic: MCI

சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ இன்று (செப்டம்பர் 17) காலை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் (Booster Dose) தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

கடந்த ஜனவரி மாதம் COVID-19க்கு எதிரான Pfizer-BioNTech தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டார். கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரும்படி பிரதமர் திரு. லீ கேட்டுக்கொண்டார்.

விடுதியில் அடைப்பட்டிருந்தோருக்கு விடுதலை! – வெளியே சென்ற தமிழக ஊழியர்கள் 100 பேர் பெரும் மகிழ்ச்சி

கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்றும், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்வதன் மூலம், கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயத்தை குறைக்கலாம் என திரு. லீ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இந்த மாதம் தொடக்கத்தில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தடுப்பாற்றல் குறைவாக உள்ளோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில், 60 வயதுக்கு மேற்பட்டோர் 6-ல் இருந்து 9 மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் உட்பட மொத்தம் 20 குழுமங்கள் கண்காணிப்பில்…