விடுதியில் அடைப்பட்டிருந்தோருக்கு விடுதலை! – வெளியே சென்ற தமிழக ஊழியர்கள் 100 பேர் பெரும் மகிழ்ச்சி

Photo: The Backpack Adventures

கோவிட்-19 தொற்றுக் காரணமாகப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து விடுதியில் முடங்கி கிடந்த ஊழியர்களுக்கு, தற்போது வெளியிடத்திற்கு செல்ல அனுமதி கிடைத்துள்ளது.

இச்சுதந்திரத்தால் உற்சாகம் அடைந்த ஊழியர்கள் வெளியில் வந்து லிட்டில் இந்தியாப் போன்ற பகுதிகளைச் சுற்றிப் பார்த்தனர்.

சிங்கப்பூரில் தடுப்பூசி குறித்த நிலவரம் – இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது?

கிட்டதட்ட ஓராண்டிற்கு பின் வெளியுலகத்தைப் பார்த்த கட்டுமானத்துறை ஊழியரான திரு. வீராசாமி முருகன் (வயது 28) மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆனந்த கண்ணீர் அவர் கண்களில் ஆறாகப் பெருகியது.

தாெற்றுக்கு முன்பு வார இறுதி நாட்களில் முருகன் ஸ்ரீ வீரகாளியம்மன் கோவிலுக்குச் செல்வார். அப்பாேது அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை.

தற்போது, கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் லிட்டில் இந்தியாவிற்கு சென்றது, ஏதோ தன் சொந்த ஊருக்குச் சென்றதுப் போல் சந்தோஷமாக உள்ளதாக திரு.முருகன் ஆர்பரித்தார்.

நீளக் கை சட்டை அணிந்து புத்துணர்ச்சியுடன் காணப்பட்ட திரு. முருகன், தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தால், ஊருக்குச் சென்று தனது சாெந்தபந்தங்களையும் காண முடியும் என்ற நம்பிக்கையை இந்த தளர்வு மனதில் விதைத்தத்துள்ளது என்றார்.

வெவ்வேறு விடுதியில் தங்கியிருந்த ஊழியர்களை, கொஞ்சம் கொஞ்சமாக மக்களோடு ஒருங்கிணைக்கும் திட்டத்தின் முதல் பகுதியாக, லிட்டில் இந்தியா அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் ஏறக்குறைய 100 பேர் தமிழகத்தின் அரியலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதில் முருகனும் ஒருவர் ஆவார். தடுப்பூசிகள் போடப்பட்ட இவ்வூழியர்கள் ஸ்ரீ வீரகாளியம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.

திட்டத்தின்படி வாரத்திற்கு 500 வரையிலான ஊழியர்கள் லிட்டில் இந்தியாவிற்குச் செல்ல அனுமதிக்கப்படலாம் என்றும், இத்திட்டத்திற்கு விடுதிகளில் எது தகுதி அடையும் எனவும் அமைச்சு ஆராய்ச்சி செய்யும் என குழுவின் தலைவர் டங் யு ஃபாய் தெரிவித்தார்.

லிட்டில் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்பட்ட இந்த ஊழியர்கள் வெஸ்ட்லைட் மண்டாய் விடுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஸ் கோர்ஸ் வேனிலும், தேக்கா வேனிலும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், இறக்கி விடுவதற்கும் இரண்டு இடங்கள் இருக்கும்.

விடுதிகளிலிருந்து புறப்படுவதற்கு முன்பும், 3 நாட்களுக்கு பிறகும் ஊழியர்கள் ART சாேதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான செலவை மனிதவள அமைச்சு ஏற்குமென்றும் திரு டங் தெரிவித்தார்.

ரேஸ் கோர்ஸ் சாலை, ஜாலான் புசார் சாலை, கிட்சனர் சாலை, அப்பர் புக்கிட் சாலை ஆகிய பகுதிக்குள் மட்டும் அவர்கள் இருக்க வேண்டும் என்றார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் போது தொற்று பரவல் வெளிநாட்டு ஊழியர்களிடையே வேகமாக பரவியது. இதனால் விடுதியில் உள்ள ஊழியர்களுக்கு வேலையிடத்தைத் தவிர மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

பல நாட்களாக விடுதிகளில் மட்டுமே அடைந்திருந்துவிட்டு, தற்போது வெளியில் வர முடிந்ததால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர் ஊழியர்கள்.

கடந்த 14 வருடமாக சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் பணியாற்றும் பக்கிரிசாமி முருகானந்தம் (வயது 36), அடைப்பட்டிருந்தது வருத்தமளித்தாலும், அது தங்களது நன்மைக்கே என்பதை புரிந்துக் கொண்டதாகக் கூறினார்.

முஸ்தாபவுக்குப் போகப் போகிறேன், வாழையிலை உணவு சாப்பிடப் போகிறேன், ஜூரோங் ஈஸ்ட்டுக்கு போகப் போகிறேன் என மகிழ்ச்சி பொங்க கூறினார் திரு. மகாலிங்கம் ராஜாஜி (வயது 28).

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு.!