35 பயணிகளை விட்டு புறப்பட்டுச் சென்ற ஸ்கூட் விமானம்!

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

35 பயணிகளை விடுத்து ஸ்கூட் நிறுவனத்தின் விமானம் (Scoot Airlines) குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருள்: கோல்மால் வேலை – ஒருவர் கைது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம், இந்தியாவில் திருச்சி, கோவை, விசாகப்பட்டினம், அமிர்தசரஸ், திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரவு 07.55 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த ஸ்கூட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், 35 பயணிகளை விடுத்து பிற்பகல் 03.00 மணிக்கே புறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்தப் பயணிகள் விமான நிலையத்தில் போராட்டம் நடத்தினர். அத்துடன், விமான நிலையத்தின் உயரதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

சூட்கேஸில் சடலமாக கிடந்த வெளிநாட்டு ஊழியர் – துண்டு துண்டாக கிடந்த பிரேதம்

இதையடுத்து, இந்திய விமான போக்குவரத்து ஆணையம், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பயண நேரம் மாற்றம் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. எனினும், சில பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்த முகவர்கள், இந்த தகவலைப் பயணிகளுக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை என்று ஸ்கூட் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.