சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருள்: கோல்மால் வேலை – ஒருவர் கைது

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு பெயர் மாற்றி கொண்டு செல்லப்பட்ட பொருள் – ஒருவர் கைது
Wikipedia

சிங்கப்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்ட கொட்டைப்பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.

அதாவது வஉசி துறைமுகத்துக்கு சென்ற சரக்குப் பெட்டிகளை மத்திய அதிகாரிகள் கண்காணித்து சோதனை செய்தனர்.

அப்போது, சிங்கப்பூரில் இருந்து வந்த பெட்டியில் “பார்லி அரிசி” என்றும், துபாயில் இருந்து கால்நடைத் தீவனம் என்றும் பெயரிடப்பட்டு வந்த சரக்குப் பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சிங்கப்பூரில் காணாமல் போன இந்தியர் கண்டுபிடிப்பு – நன்றி கூறிய SPF

ஆனால்2 சரக்கு பெட்டிகளில் குறிப்பிடப்பட்ட பொருட்களுக்கு பதிலாக மொத்தம் 23 டன் கொட்டைப்பாக்குகள் இருந்தன.

கொட்டைப்பாக்கு இந்திய அரசு தடை விதிக்கவில்லை இருப்பினும், அதற்கான வரியை 100 சதவீதம் செலுத்தி அதனை நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

ஆனால் வரி ஏய்ப்பு செய்ய வேறு பெயர்களை குறிப்பிட்டு அதனை கொண்டு வந்தது குற்றம் ஆகும்.

சுமார் ரூ.3.5 கோடி மதிப்புள்ள அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த நபர் ஒருவரை விசாரித்து வருகின்றனர்.

மாதச் சம்பளம் S$1,400 – பகுதி நேர சம்பளம் S$9… இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 1,900 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்