கெயிலாங்கில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கை – 37 பேர் பிடிபட்டனர்

Photo: Singapore Police Force

கெயிலாங்கில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து மொத்தம் 37 பேர் பிடிபட்டனர்.

அதாவது, 21 முதல் 66 வயதுக்குட்பட்ட 30 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் மீது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சிங்கப்பூர்-மலேசியா இடையிலான நில வழி பயணம் சில வாரங்களில்..

கடந்த அக்டோபர் 15 மற்றும் அக்டோபர் 29க்கு இடையில் பல அமைப்புகள் நடத்திய இந்த அமலாக்க நடவடிக்கை பெடோக் போலீஸ் பிரிவின் தலைமையில் நடைபெற்றது.

மேலும், இதற்கு குற்றப் புலனாய்வுத் துறை (CID), மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB), சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மற்றும் குடிநுழைவு & சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) உள்ளிட்ட அதிகாரிகள் உதவி புரிந்தனர்.

இதில் சுகாதாரப் பொருட்கள் சட்டத்தின்கீழ் பல்வேறு குற்றங்களுக்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சூதாட்டம், இரகசிய சமூக குழு மற்றும் அனுமதி இல்லா மசாஜ் நிறுவனங்கள் நடத்தியவர்கள் உள்ளிட்டோர் இதில் பிடிபட்டனர்.

இந்த நடவடிக்கை கெயிலாங்கில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

கெய்லாங் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சி இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்கள் இனி விரும்பும் இடத்திற்குச் செல்ல அனுமதி