போலீசாரிடம் பிடிபட்ட 376 நபர்கள் – தொடரும் விசாரணை

job scam in singapore

சிங்கப்பூரில் மொத்தம் 376 நபர்கள் மோசடி சந்தேகம் தொடர்பில் பிடிப்பட்டுள்ளனர் என சிங்கப்பூர் காவல் படை (SPF) கூறியுள்ளது.

மொத்தம் 254 ஆண்களும் 122 பெண்களும் அதில் அடங்குவர், மேலும் அந்த சந்தேகநபர்கள் 13 மற்றும் 71 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் SPF குறிப்பிட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் S$9.2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர் என்று SPF செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

கடந்த நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 8 க்கு இடையில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

பிடிபட்ட சந்தேக நபர்கள் 1,300 க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது.

அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.