சிங்கப்பூரில் 3,900 சிறப்பு பள்ளி மாணவர்களில் 60%க்கும் அதிகமானோர் தடுப்பூசிக்கு முன்பதிவு

Facebook/Chan Chun Sing

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைக்கப்பட்ட சுமார் 3,900 சிறப்புக் கல்வி (SPED) பள்ளி மாணவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சகம் (MOE) புதன்கிழமை (ஜனவரி 12) தெரிவித்துள்ளது.

SPED பள்ளிகளில் ஆறு முதல் 11 வயது வரையிலான மாணவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி இன்று புதன்கிழமை நான்கு பள்ளிகளில் தொடங்கியது.

விடுதியில் தகராறு: இறந்த தன் தாயை அவமானப்படுத்திய வெளிநாட்டு ஊழியரை குழவி கல்லால் தாக்கிய சக ஊழியருக்கு சிறை

அந்த பள்ளிகள்: கட்டோங் பள்ளி, லைட்ஹவுஸ் பள்ளி, லீ காங் சியான் கார்டன்ஸ் பள்ளி மற்றும் டவுனர் கார்டன்ஸ் பள்ளி ஆகியவை ஆகும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியான மாணவர்களைக் கொண்ட அனைத்து 20 SPED பள்ளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று MOE கூறியுள்ளது.

தனது மனைவியைக் கொலை செய்ததாக கணவர் மீது குற்றச்சாட்டு – குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்!