சிங்கப்பூரில் வாரத்துக்கு 4 நாள் வேலையா?? ஊழியர்களின் தேவை அதிகரிக்கும்.. ஆனால் சம்பளம் குறையும் என அச்சம்

4 day work week

சிங்கப்பூரில் வாரத்தில் நான்கு நாள் வேலை முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழும்பியது.

அதற்கு பதில் கூறிய மனிதவள இணை அமைச்சர் கன் சியோவ் ஹுவாங்; “முதலாளிகளும் ஊழியர்களும் நெகிழ்வு மனநிலையை கொண்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

பணிப்பெண்ணின் தரங்கெட்ட செயல்: கழிவறையில் ஆண்களுடன் வீடியோ கால்… நிர்வாண போட்டோ – புகார் செய்த முதலாளி

இது சில முதலாளிகள், ஊழியர்களுக்கு உகந்ததாக அமையும். அதே சமயம் வாரத்தில் நான்கு நாள் வேலை நடைமுறை என்பது மற்ற அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது என்பதை வெளிப்படையாக அவர் குறிப்பிட்டார்.

வாரத்துக்கு 4 நாள் வேலை நடைமுறை, MOM மற்றும் முத்தரப்பு கூட்டாளிகள் பரிந்துரைப்பில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கால நேரம் குறையும் பட்சத்தில், ஊழியர்கள் தேவை அதிகரிக்கும் சூழல் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

இதில் ஊழியர்கள் நலன், செலவுகள் உள்ளிட்ட பல காரணிகள் அக்கறையாக இருப்பதாக அவர் கூறினார்.

பொதுவாக இந்நடைமுறையால் சம்பளத்தில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் ஊழியர்களிடம் இருந்து வருகிறது.

“தன்னை மானபங்கம் செய்துவிட்டதாக புகார் அளிப்பேன்” – ஊழியரை மிரட்டிய பெண்ணுக்கு சிறை