வூஹான் வைரஸ்; சீனா செல்லாத 4 பேர் உட்பட 6 பேரை உறுதிசெய்த சிங்கப்பூர்..!

4 locally transmitted cases among new coronavirus patients in Singapore

சிங்கப்பூரில் மேலும் 6 பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 6 புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. அதில் சீனாவுக்கு சமீபத்திய பயண வரலாறு இல்லாத நான்கு சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் அடங்குவர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட தன் முதல் குடிமகனை உறுதிப்படுத்திய மலேசியா..!

அண்மையில், சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பயணிகளுடன் அவர்களுக்கு நீடித்த தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நான்கு பேரில், இருவர் Cavan ரோட்டில் உள்ள ஒரு மருந்துக்கடையில் பணிபுரியும் சிங்கப்பூர்வாசிகள். மேலும், அந்தக் கடைக்குப் பெரும்பாலும் சீன நாட்டை சேர்ந்த சுற்றுப்பயணிகள் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

மூன்றாவது நபர், மருந்துக்கடையில் பணிபுரியும் சிங்கப்பூர்வாசிகள் ஒருவரின் வீட்டில் பணிபுரியும் இந்தோனேசியப் பணிப்பெண், இவரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஆசியாவின் மிகப்பெரிய “சிங்கப்பூர் ஏர்ஷோ 2020” – சில நிறுவனங்கள் விலகலா..?

அதை தொடர்ந்து, நான்காவது நபர் சிங்கப்பூர்வாசி, இவர் சீனச் சுற்றுப்பயணிகளை அந்த மருந்துக்கடைக்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி என்று கூறப்படுகிறது.

மேலும் கடைசி இருவர், சீன வூஹான் நகரிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கப்பூர்வாசிகள் ஆவார்கள். இதன் மூலம் சிங்கப்பூரில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கையை 24 ஆகக் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட வூஹான் குடியிருப்பாளரான 35 வயது ஆடவர், தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்திலிருந்து (பிப்ரவரி 4) விடுவிக்கப்பட்டார்.