தாம்சன் சாலையில் இடிக்கப்படும் 57 ஆண்டுகள் பழமையான 4 மாடி கட்டிடம்!

(Photo: TODAY)

தாம்சன் சாலையில் இருக்கும் 57 ஆண்டுகள் பழமையான நான்கு மாடி கட்டிடமானது பாதுகாப்பு காரணமாக இவ்வாண்டின் இறுதிக்குள் இடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

யுனைடெட் ஸ்கொயர் (United Square) கடைத்தொகுதிக்கு எதிரே அமைந்துள்ள இந்த கட்டடத்தில் 12 வீடுகள் மற்றும் 4 கடைகளும் உள்ளதாகவும் வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு சரியான இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தோ பாயோ விபத்தில் காரின்கீழ் சிக்கிய 6 வயது குழந்தை… ஓட்டுநர் கைது

வடக்கு-தெற்கு வழித்தடத்துக்கான சுரங்கப்பாதை திட்டத்தின் கட்டுமானத்திற்க்காக இந்த கட்டடத்தை அரசாங்கம் கைப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த கட்டடமானது இடிக்கப்பட்ட பிறகு சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம், கட்டட, கட்டுமான ஆணையம், சிங்கப்பூர் நில ஆணையம் ஆகியவை வெளிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

வடக்கு பகுதியில் இருக்கும் நகர்களை இணைக்கும் இந்த சுரங்கப்பாதை பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அந்த கட்டடத்தின் அடித்தளத்தை நில போக்குவரத்து ஆணையம் ஆய்வு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்த கட்டடத்தின் அடித்தளமானது மிகவும் பலவீனமாக இருப்பதால் அதை பலப்படுத்தினால்தான் சுரங்கப்பாதை பணிகளை கட்டடம் தங்கி நிற்கும் என்று பொறியாளர்கள் கடந்த ஆண்டு கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பணிப்பெண்ணை தாக்கிய குற்றத்திற்க்காக முதலாளிக்கு சிறைத்தண்டனை…