பணிப்பெண்ணை தாக்கிய குற்றத்திற்க்காக முதலாளிக்கு சிறைத்தண்டனை…

(Photo: Getty)

பணிப்பெண்ணை தாக்கிய குற்றத்திற்க்காக முதலாளிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்பணிபெண்ணிற்க்கு காது கேளாமை நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தஞ்சோங் ரு ரோட்டில் உள்ள பெபிள் பே கொண்டோமினியத்தில் இருக்கும் காயத்திரி ஐயரிடம் (வயது 51) பணிபெண்ணாக மியான்மர் நாட்டை சேர்ந்த தாங் கா லா (வயது 30) பணியாற்றி வருகிறார், காயத்திரி பணிப்பெண்ணை இரு முறை துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாவது இடம்

கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது முதலாளியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ‘ம்மா’ என்னும் வார்த்தையை பயன்படுத்தியதற்காகவும், அதே ஆண்டு டிசம்பர் மாதம் அதிகாலையில் தேசிய சேவை செய்யும் தனது மகனை எழுப்பிவிடாததற்கும் அவரை அறைந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதிகாலையில் நேர்ந்த இந்த சம்பவத்தினால் பணிப்பெண்ணிற்கு இடது காதின் பக்கமும் வலது காதின் பக்கமும், அன்று முழுவதும் இடது காது கேட்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தனக்கு நேர்ந்தவற்றை ஐந்து நாட்களுக்கு பிறகு முதலாளிவீட்டிலிருந்து வெளியேறி போலீசாரிடம் பணிப்பெண் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018 செப்டம்பர் மாதம் அவர் காயங்களிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பணிப்பெண்ணுக்கு S$5,330 தொகையை இழப்பீடாக வழங்கவும் மேலும் பணிப்பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக காயத்திரிக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் S$7,500 வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தடுப்பூசிக்கு மின்னஞ்சல் அனுப்புவது போன்று தனிப்பட்ட தகவலை திருடும் மோசடி – எச்சரிக்கை