சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜன்னல்கள் விழுந்ததில் 43 சம்பவங்கள் பதிவு

TODAY

சிங்கப்பூரில் இந்த ஆண்டு முதல் 11 மாதங்களில் ஜன்னல்கள் விழுந்ததில் 43 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) மற்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (HDB) சனிக்கிழமை (டிசம்பர் 11) தெரிவித்தன.

அதில் 22 சம்பவங்கள் கேஸ்மென்ட் ஜன்னல்கள், 16 ஸ்லைடிங் ஜன்னல்கள் மற்றும் ஐந்து பிற ஜன்னல் வகைகள் என்று அவைகள் கூட்டு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளன.

“வேலை தேடுவோரிடம் S$450 வரை கட்டணம்” – சட்டவிரோதமாக இயங்கிய வேலைவாய்ப்பு ஏஜென்சி: சிறை, அபராதம் விதிப்பு!

இந்த பதிவான சம்பவங்களில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் BCA மற்றும் HDB தெரிவித்தது.

துருப்பிடித்த அலுமினிய பிணைப்பாணிகள், ஜன்னல்கள் விழுந்ததற்கு முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டது.

அத்தகைய ஜன்னல்களில் உள்ள அனைத்து அலுமினிய பிணைப்பாணிகளையும் துருப்பிடிக்காத எஃகு மூலம் உரிமையாளர்கள் கடந்த 2004 முதல் கட்டாயம் மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அவை துருப்பிடிக்கவில்லை அல்லது தளர்வாக இல்லை என்பதைச் சரிபார்க்குமாறு வீட்டு உரிமையாளர்களுக்கு BCA மற்றும் HDB அறிவுறுத்தியது.

பராமரிப்பு இல்லாமல் ஜன்னல்கள் விழுந்தால், வீட்டு உரிமையாளர்களுக்கு S$10,000 வரை அபராதம், ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

2006 முதல், ஜன்னல்கள் விழுந்ததற்காக மொத்தம் 388 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் 92 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை!