சிங்கப்பூரில் மேலும் 442 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் நேற்று (14/12/2021) மதியம் 12.00 மணி நிலவரப்படி, மேலும் 442 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 409 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 401 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் 8 பேருக்கும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 33 பேருக்கும் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,74,143 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் மூன்று ஆடவர்களை தேடி வரும் காவல்துறை!

கொரோனா பாதிப்பால் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 548 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 75 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 34 பேர் ஐ.சி.யூ. பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ. பிரிவில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 3 பேரின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

நிலவழி VTL மூலம் டிசம்பர் 20 முதல் மலேசியாவுக்குள் நுழையலாம்!

நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த 603 பேர் வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.