4D லாட்டரியில் வெற்றி… குப்பையில் தூக்கி எறியப்பட்ட டிக்கெட் – ஓடி உதவிய ஊழியர்கள்

4D ticket threw it away disposal workers help
Pearlyn Yap

சிங்கப்பூரில் வசிக்கும் பெரும்பாலான நபர்களுக்கும் லாட்டரி பரிசு தொகையை வெல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருக்கும்.

இந்நிலையில், பெண்மணி ஒருவர் 4D எண் மூலம் பரிசு வென்றுள்ளார், ஆனால் அவர் தற்செயலாக தன் லாட்டரி டிக்கெட்டை தூக்கி எறிந்ததைக் கண்டு கடும் பீதியடைந்தார்.

வியாழன் (டிசம்பர் 1) அன்று ஏஷியாஒனிடம் பேசிய பேர்லின் யாப் என்ற அந்த பெண்; கடந்த செப். 11 அன்று கெயிலாங் செராயில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கடையில் இருந்து S$12 க்கு லாட்டரி வாங்கியதாக பகிர்ந்து கொண்டார்.

ஆனால், சில மணிநேரங்களுக்குப் பிறகு தான் வாங்கிய லாட்டரி சீட்டு காணாமல் போனதை அவர் உணர்ந்தார்.

“தலையில் வழுக்கை, திருமணம் நடக்கல”… முடி மாற்று சிகிச்சை செய்த இந்தியர் – கடுமையான முறையில் மரணம்

அதன் பின்னர் வீட்டில் இருந்த CCTV காட்சிகளை சோதித்ததில், அவர் தற்செயலாக அதை குப்பை தொட்டியில் வீசியது கண்டறியப்பட்டது.

தனது லாட்டரிச் சீட்டை மீட்டெடுக்க முடியவில்லை என்றும், பிறகு குப்பை சேமிக்கும் பகுதி ஹாட்லைன் எண்ணுக்கு அழைத்து எனது நிலைமையை விளக்கி கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மறுசுழற்சி செய்ய லாரி இன்னும் வரவில்லை என்றும், அதற்காக காத்திருக்கும்படி அங்கிருந்து பதில் சொல்லப்பட்டதாக அந்த பெண் கூறினார். இதனை அடுத்து அங்கு பணிபுரிபவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து இரண்டு ஊழியர்கள் குப்பை அடுக்கிலிருந்து பிளாஸ்டிக் பைகளை எடுத்து சோதனை செய்தனர். அப்போது அதிர்ஷ்டவசமாக லாட்டரி டிக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது, என்றார்.

உதவிய கரங்களுக்கு மிக்க நன்றி மற்றும் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார் அவர்.

சிங்கப்பூரில் புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் அலை…? அரசாங்கம் கூறும் தகவல்