“5 கோடி ரூபாய் வெளிநாடு வாழ் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும்”- தமிழ்நாடு முதலமைச்சர் உரை!

Photo: Tamilnadu Government

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12/01/2022) அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் காணொளி வாயிலாக விழாப் பேரூரையாற்றினார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்: ராமகிருஷ்ணா மிஷன் இந்திய தூதரகத்துடன் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!

தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதாவது, “தமிழால் இணைவோம் என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழுக்குத்தான் அந்த வலிமை இருக்கிறது. மத மாயங்களையும், சாதிச் சழக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது. அதனால்தான் தமிழால் இணைவோம் என்பதை நமது முழக்கமாகக் கொண்டுள்ளோம். தமிழால் இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும், அதே வேளையில் அயலகத் தமிழர் நாள் வாழ்த்துகளையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடி இருக்கிறோம் என்றால், தமிழன் என்ற உணர்வோடு நாம் கூடி இருக்கிறோம். நம்மை நாடுகள் பிரிக்கிறது. நிலங்கள் பிரிக்கிறது. ஆனாலும் மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு.

விதிமுறைகளை மீறியதாக KFC கடை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

மீண்டும் ஆட்சிக்கு வந்த நமது அரசு ‘வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்பதை ஐந்தே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும்.

5 கோடி ரூபாய் வெளிநாடு வாழ் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகச் செலவினங்களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் என அறிவித்தேன்.

சூரிய நமஸ்கார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள இந்திய ஆயுஷ் அமைச்சகம்- பங்கேற்குமாறு இந்திய தூதரகம் அழைப்பு!

வெளிநாடு வாழ் தமிழர் குறித்த தரவு தளம் (Database) ஏற்படுத்தப்படும். தமிழர்கள் பணியின் போது இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கப்படும். தமிழர்கள் புலம்பெயரும்போது, பயண புத்தாக்கப் பயிற்சி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும்.” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த விழாவில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைச் செயலாளர் ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப., பொதுத்துறை சிறப்புச் செயலாளர் வ.கலைஅரசி இ.ஆ.ப., தமிழ் இணைய கல்விக்கழக இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., மலேசியா நாட்டின் முன்னாள் துணை அமைச்சர் மற்றும் லாபூவான் துறைமுகத் தலைவர் டாடூக்.பி.கமலநாதன், மேரிலாண்ட் போக்குவரத்து ஆணையர் முனைவர் ராஜன் நடராஜன், பப்புவா நியூ கினியா மாகாண ஆளுநர் சசிதரன் முத்துவேல், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், லண்டன்- ஹார்லி ஸ்ட்ரீட் ஹெல்த் கேர் இயக்குநர் டாக்டர் தனபால் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.