சூரிய நமஸ்கார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள இந்திய ஆயுஷ் அமைச்சகம்- பங்கேற்குமாறு இந்திய தூதரகம் அழைப்பு!

Photo: Ministry of Ayush in India official twitter page

மகர சங்கராந்தி (Makar Sakranti) தினமான ஜனவரி 14- ஆம் தேதியன்று (சூரியன் பூமியின் வடபகுதியை நோக்கி பயணிக்கும் நாள்) உலகம் முழுவதும் உள்ள 75 லட்சம் மக்கள் பங்கேற்கும் சூரிய நமஸ்கார (Surya Namaskar) நிகழ்ச்சிகளுக்கு இந்திய ஆயுஷ் அமைச்சகம் (Ministry of Ayush) ஏற்பாடு செய்துள்ளது.

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்: ராமகிருஷ்ணா மிஷன் இந்திய தூதரகத்துடன் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!

ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்கியதற்காக இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வளிக்கும் சூரியனுக்கு வணக்கம் தெரிவிக்கும் சூரிய நமஸ்காரம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆற்றலின் முக்கிய ஆதாரமான சூரியன், உணவு சங்கிலியின் தொடர்ச்சியாக மட்டுமல்லாமல், மனித உடலுக்கும் மனதுக்கும் ஆற்றலையும் அளிக்கிறது. அறிவியல் பூர்வமாக, சூரிய நமஸ்காரம் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மனித உடலுக்கு விட்டமின் டி-யை அளிக்கிறது.

சிங்கப்பூரில் 3,900 சிறப்பு பள்ளி மாணவர்களில் 60%க்கும் அதிகமானோர் தடுப்பூசிக்கு முன்பதிவு

மேலும் இந்த நிகழ்ச்சி மகர சங்கராந்தி என்னும் நமது கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்தை வெளிக்காட்டும். சூரிய நமஸ்காரத்தில், 8 ஆசனங்கள் உள்ளன. உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் இதனை காலை நேரத்தில் செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்கார நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வகையில் இந்திய ஆயுஷ் அமைச்சகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் (High Commission of India in Singapore), “சூரிய நமஸ்கார நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://yoga.ayush.gov.in/suryanamaskar என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பெயர், முகவரி, தொலைபேசி எண், வசிக்கும் நாட்டின் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு பதிவு செய்துக் கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் இந்திய ஆண்களுடன் பெண்கள் ஏன் அரிதாகவே டேட்டிங் செய்கிறார்கள்? மலேசிய பெண் உடைக்கும் இரகசியம்!

அதேபோல், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், ஜனவரி 1- ஆம் தேதி முதல் பிப்ரவரி 20- ஆம் தேதி வரை நடைபெறும் சூரிய நமஸ்கார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. உலக சாதனை படைக்கும் வகையில் 75 கோடி பேர் பங்கேற்று சூரிய நமஸ்காரங்களைச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.