சிங்கப்பூரில் சோதனையில் சிக்கிய S$230,000 மதிப்புள்ள போதைப்பொருள் – 5 பேர் கைது..!

5 people arrested, drugs worth S$230,000 seized in Ang Mo Kio and Bukit Panjang
(Photo: CNB)

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள், கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) ஆங் மோ கியோ மற்றும் புக்கிட் பஞ்சாங்கில் சோதனைகளை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில், போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் 5 சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் மிகப் பெரிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் 175 பேருக்குக் தொற்று பாதிப்பு..!

மேலும், இந்த சோதனையின்போது சுமார் S$230,000 மதிப்புள்ள போதைமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக CNB நேற்று செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதில் கைப்பற்றப்பட்ட மருந்துகளில் பல்வேறு போதைபொருட்கள் அடங்கும் என்றும் CNB குறிப்பிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று மாலை, ஆங் மோ கியோ அவென்யூ 5க்கு அருகே கார் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அதில், 30 மற்றும் 50 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அந்த காரில் இருந்து பல்வேறு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள அந்த போதைப்பொருளைக் 314 போதைப்புழங்கிகள் சுமார் ஒரு வாரம் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : CECA உடன்பாடு இந்திய ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் உடனடி குடியுரிமை அல்லது PR வழங்காது: MTI விளக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg