CECA உடன்பாடு இந்திய ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் உடனடி குடியுரிமை அல்லது PR வழங்காது: MTI விளக்கம்..!

Singapore citizenship or PR apply english test

சிங்கப்பூர்-இந்தியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (CECA), இந்திய நாட்டினருக்கு சிங்கப்பூர் குடியுரிமை, நிரந்தர குடியிருப்பு அல்லது வேலைவாய்ப்பு ஆகியவற்றை தானாகவே வழங்குவதில்லை என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) தெரிவித்துள்ளது.

CECA-வின் கீழ், இந்தியர்கள் சிங்கப்பூருக்கு வந்து நிரந்தர குடியிருப்பாளர்களாகவும் குடிமக்களாகவும் மாற முடியும் என்பது உண்மையல்ல. CECAஇல் அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை என்று ஒரு MTI தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் EP அனுமதி, S Pass அனுமதிக்கான குறைந்தபட்ச சம்பள உயர்வு விவரங்கள்..!

சிங்கப்பூரில் குடியுரிமை, நிரந்தர குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு இந்திய குடிமக்களுக்கு தானியங்கி அணுகலை CECA அளிக்கிறதா என்பது குறித்த ஊடக கேள்விகளுக்கு பதிலளிக்கும் அறிக்கையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், இந்த உடன்பாட்டின் மூலம் இங்கு வரும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகளுக்கு உடனடியாக EP வேலை அனுமதி வழங்கப்படவேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை என்று விளக்கி குறிப்பிடப்பட்டுள்ளது.

CECA 2005இல் நடைமுறைக்கு வந்தது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் வலைத்தளத்தின் தகவல்களின்படி, இந்த ஒப்பந்தம் சிங்கப்பூர் வணிகங்களுக்கு இந்தியாவின் சந்தைக்கு அதிக அணுகலை வழங்கும் விரிவாக்கப்பட்ட கட்டண சலுகைகள் மற்றும் மேம்பட்ட விதிகளை வழங்குகிறது.

மேலும் நான்கு வகையான வணிக நபர்கள் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுமுகமாகப் பயணம் செய்ய அனுமதிக்கிறது.

வெளிநாட்டவர்களுக்கு உடனடியாக EP வேலை அனுமதிகள் குறித்து, சிங்கப்பூரின் எந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் குறிப்பிடவில்லை என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 18 பேர் ஒன்றுகூடிய சம்பவம் – ஏற்பாடு செய்தவருக்கு அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg