சிங்கப்பூர் உணவகங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உணவு உண்ண அனுமதி!

Photo: visitsingapore.com

கொரோனா காலத்தில் காப்பிக் கடைகள் மற்றும் உணவகங்களுக்கு சிங்கப்பூர் அரசு பல கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்திருந்தது.

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் உணவகங்களுக்கு அரசு கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது.

தீபாவளி திருநாளில் நடைபெற்ற நெகிழ்வான சம்பவம்!

அதன் அடிப்படையில் தற்போது உணவகங்களில் ஒரே குடும்பத்தில் உள்ள 5 நபர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என்று கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும் காப்பிக் கடைகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மட்டும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் பல உணவகங்களில், பலர் குடும்பதத்துடன் வந்து உணவு சாப்பிடுவதற்கு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கஸ்டமர்கள் செய்யும் முன்பதிவுகளின் விபரத்தில் உணவகத்திற்கு வரும் 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான என்று அவர்களின் வீட்டு முகவரிகளை சரிபார்த்து வருகின்றனர்.

முன்பதிவு செய்தவர்களின் முகவரிகள் சரிபார்க்கப்பட்ட பின்பே அவர்களை, உணவு உண்பதற்கு உணவகங்களில் அனுமதிக்கப்பட வேண்டும்.

இதனால் வரும் வாடிக்கையாளர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா என்று கண்டறியும் வேலையில் உணவகங்கள் ஆர்வம் காட்டுகிறது.

உணவகங்களில் உணவு சாப்பிட வருபவர்கள் கண்டிப்பாக அவர்களுடைய அடையாள அட்டைகளை எடுத்துவருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வாடிக்கையாளர்கள் உணவகத்துக்கு வந்த பின் அவர்களுடைய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை உணவக ஊழியர்கள் சரிபார்ப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் வீட்டு முகவரியை எப்படி சரிபார்த்து ஒரே குடும்பமா என்பதை அறிவது என்று உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழீயர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட பயணத் தடை பட்டியலிலிருந்து சிங்கப்பூர் நீக்கம்!