11 நாள் நடந்த அதிரடி சோதனையில் சிக்கிய 50 பேர் – அவர்களிடம் போலீஸ் விசாரணை

50 people under investigation after Geylang multi-agency raids
Singapore Police Force

சிங்கப்பூரின் கெலாங் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் பல்வேறு குற்றங்களுக்காக பிடிபட்ட மொத்தம் 50 பேர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் இன்று (அக் 23) தெரிவித்தனர்.

அவர்கள் 21 முதல் 73 வயதுக்குட்பட்ட 47 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

“தனது நண்பரை காப்பற்ற முயன்றபோது கடலில் அடித்துச்செல்லப்பட்டார்..” – காணாமல் போனவர் குறித்த தகவல்

பெடோக் போலீஸ் பிரிவு தலைமையிலான இந்த சோதனை நடவடிக்கை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 9 வரை 11 நாள் நடந்தன.

சட்டவிரோத சூதாட்டம், சட்டவிரோதமான சில மருந்துகள் வைத்திருந்தது, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் தீர்வை செலுத்தாத சிகரெட் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றங்கள் அதில் அடங்கும்.

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும் காவல்துறை மற்ற அமலாக்க அமைப்புகளுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும் என கூறப்பட்டுள்ளது.

“இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பணிபெண்களுக்கு கட்டுப்பிடியாகும் கட்டணம்” – ஏஜென்சிகளின் விளம்பரம்