டெலிகிராமை இதற்குமா பயன்படுத்துகிறார்கள்… 50 பேர் அதிரடி கைது!

கடந்த 2019 முதல், போதைப்பொருள் குற்றவாளிகள் டெலிகிராமை போதைப்பொருளை விற்க அல்லது வாங்குவதற்கான தளமாகப் பயன்படுத்துவதை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டெலிகிராமில் போதைப்பொருள் பரிவர்த்தனைகளை செய்த சுமார் 200க்கும் மேற்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Omicron வைரஸ் தொற்று குறித்த முழு விவரங்கள் தெரியாததால் கட்டுப்பாடுகள் தேவை இல்லை – சிங்கப்பூர்

மேலும், 14 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ வகை போதைப்பொருள், 7.6 கிலோ கஞ்சா, 400 கிராம் ஹெராயின் மற்றும் டெலிகிராம் வழியாக பரிவர்த்தனை செய்யப்பட்ட பிற போதைப்பொருள்களையும் CNB கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், அத்தகைய போதைப்பொருள் புழங்கிகளை இலக்காகக் கொண்டு சமீபத்தில் தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், மொத்தம் 50 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அதில் S$20,400 மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக CNB புதன்கிழமை (டிசம்பர் 1) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 16 முதல் 30 வரை, அங் மோ கியோ, பூன் லே, ஹூகாங், பாசிர் ரிஸ் மற்றும் பொங்கோல் உள்ளிட்ட சில பகுதிகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் ஆக இளையவர் 20 வயதுடைய ஆடவர், இவர் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் குற்றவாளி என கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக விமான நிலையங்களில் தீவிரமாகும் சோதனைகள்: சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு!