“எளிமையாகும் சிங்கப்பூரின் சட்ட மொழி” – 500க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் சட்டங்கள் படிக்க எளிதானதாக மாற்றம்

சிங்கப்பூரின் 500க்கும் மேற்பட்ட சட்டங்கள் விரைவில் எளிமைப்படுத்தப்பட்ட மொழியைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அது பொதுமக்களுக்கு இலகுவாக படிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளில் இல்லாத அளவு “கடும் வெள்ளம்” – மலேசியாவில் 5 பேர் பலி, 41,000 பேர் வெளியேற்றம்

தண்டனைச் சட்டம் மற்றும் அறங்காவலர்கள் சட்டம் உட்பட வரவிருக்கும் 2020 திருத்தப்பட்ட சட்டங்களின் பதிப்பில் சேர்க்கப்படும்.

கூடுதலாக 510 சட்டங்கள் நவீனமயமாக்கப்பட்ட உச்சரிப்பை கொண்ட மொழி மற்றும் தெளிவான விளக்கத்தையும் கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக, “notwithstanding” என்ற வார்த்தை “despite” என்று மாற்றப்பட்டுள்ளது, அதே நேரத்தில் “for the avoidance of doubt” என்பதற்குப் பதிலாக “to avoid doubt” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

டிசம்பர் 31 முதல் நடைமுறைக்கு வரும் புதிய பதிப்பில் உள்ள வார்த்தைகள் மிகவும் துல்லியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உதாரணம் “shall” என்பதற்குப் பதிலாக “must” என்பதும், கூடுதலாக தற்போதைய சமூக விதிமுறைகளை பிரதிபலிக்க, “chairman” என்பதற்கு பதிலாக “chairperson” போன்ற பாலின-நடுநிலை சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நீளமான உட்பிரிவுகளை கொண்ட சட்ட வசனங்கள், பல துணை உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 183 பேர் – தீவிர கண்காணிப்பு