சிங்கப்பூரில் புதிதாக 569 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

569 new coronavirus cases in Singapore, including 7 community cases
569 new coronavirus cases in Singapore, including 7 community cases

சிங்கப்பூரில் நண்பகல் (ஜூன் 3) நிலவரப்படி, புதிதாக 569 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 36,405ஆக உயர்ந்துள்ளது.

இதில் 7 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.