இந்தியாவில் நடந்த சிலம்பம் போட்டியில் பதக்கங்களைக் குவித்து இரண்டாமிடம் பிடித்த சிங்கப்பூர் மாணவர்கள்!

இந்தியாவில் நடந்த சிலம்பம் போட்டியில் பதக்கங்களைக் குவித்து இரண்டாமிடம் பிடித்த சிங்கப்பூர் மாணவர்கள்!
Photo: International Silambam Academy Singapore

 

இந்தியாவின் முக்கியமான மாநிலங்களின் ஒன்றான தமிழகத்தின் உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் 5வது ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிகள், டிசம்பர் 26- ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 29- ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. ஆசிய சிலம்பம் சம்மேளனமும், இந்திய சிலம்பம் சம்மேளனமும் இணைந்து இப்போட்டிகளை நடத்தினர்.

வேலை அனுமதி சட்டத்தை மீறிய வெளிநாட்டு ஊழியர்: “கூடுதல் வேலை.. அதிக சம்பளம்” – கடும் நடவடிக்கை எடுத்த சிங்கப்பூர்

இந்த சிலம்பம் போட்டியில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா, நேபாளம், மியான்மர், வங்கதேசம், இந்தோனேசியா, மாலத்தீவு, பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஆண்கள், பெண்களுக்கான சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர், மினி சப்- ஜூனியர் உள்ளிட்டப் பிரிவுகளில் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிங்கப்பூரின் அனைத்துலகச் சிலம்பம் கழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்திய ஊழியர் மீது மோதிய வாகனம்.. தூக்கக் கலக்கம் தான் காரணம்

சிலம்பம் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக விளையாடிய சிங்கப்பூர் மாணவர்கள் 7 தங்கம், 19 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளது. பதக்கங்களை வென்று சிங்கப்பூர் மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.