வேலை அனுமதி சட்டத்தை மீறிய வெளிநாட்டு ஊழியர்: “கூடுதல் வேலை.. அதிக சம்பளம்” – கடும் நடவடிக்கை எடுத்த சிங்கப்பூர்

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

சிங்கப்பூரில் முறையான வேலை அனுமதி பெறாமல் பணியாற்றி வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் சிங்கப்பூரில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக சட்டவிரோதமான முறையில் மருத்துவர் போல வேலை செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

தலைக்கேறிய மது போதை.. வீட்டில் உறங்குவது போல படுத்திருந்த ஆடவர் – போலீசை அழைத்த பொதுமக்கள்

வேலை அனுமதி இல்லாமல், 2016 மற்றும் 2019க்கு இடையில் 25 வெவ்வேறு மருத்துவ கிளினிக்குகளில் மருத்துவராக அவர் சேவைகளை வழங்கியது கண்டறியப்பட்டது.

அவ்வாறு வேலை செய்த அவர் அதன் மூலம் கிட்டத்தட்ட S$331,500 தொகையை சம்பாதித்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சுகாதார சேவையில் அவர் துணை ஆலோசகராக E pass அனுமதியில் வேலைக்கு வந்துள்ளார்.

ஆனால், அதோடு வெவ்வேறு மருத்துவ கிளினிக்குகளில் சுமார் 511 முறை மருத்துவ சேவைகளை வழங்கி அவர் பணம் சம்பாதித்துள்ளார்.

வேலை அனுமதி அல்லது S pass அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு (வேலை அனுமதிகள்) 2012 ஆம் ஆண்டு விதிமுறைகளின் படி, சொன்ன வேலையே விட்டுவிட்டு கூடுதலாக குறிப்பிடப்படாத வேறு வேலைகளை செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சிலின் (SMC) ஒழுங்குமுறை தீர்ப்பாயம் Queck Kian Kheng என்ற அவருக்கு டிசம்பர் 28 அன்று S$50,000 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.

சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000

அங் மோ கியோவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் – சிதைந்து துர்நாற்றம் வீசிய பரிதாபம்