சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மரணத்திற்கு இதுதான் காரணம் – சுகாதார அமைச்சகம் விளக்கம்.!

Pic: REUTERS/Edgar Su

சிங்கப்பூரில் உள்ள செங்காங் மருத்துவமனையில் இந்த மாதம் 3ம் தேதி 72 வயதுடைய பெண் ஒருவருக்கு Pfizer BioNTech முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், அந்த பெண் தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாள் 4ம் தேதி அன்று மரணமடைந்தார், அந்த பெண்ணின் மரணத்திற்கு இதய நோய் காரணம் என உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேருந்து கேப்டனாகப் பணிப்புரிய ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இறந்த அந்த பெண்ணிற்கு இரத்த நாளங்களில் அடைப்பு இருந்தது என்றும், தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்டதற்கான அறிகுறி இல்லை என்றும் சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் அவரைப் பரிசோதித்தார் என்றும், தடுப்பூசி போட்ட பிறகு அரை மணி நேரம் அந்தப் பெண் கண்காணிக்கப்பட்டார் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இறந்த அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு சுகாதார அமைச்சகம் அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

‘சிங்கப்பூரில் இப்படியும் ஒரு வீட்டு உரிமையாளர்’ – மலேசிய பெண் நெகிழ்ச்சி.!