சிங்கப்பூரில் 10 முதலாளிகளில் 8 பேர் ஒரு மாத சம்பளத்தை போனஸ்-ஆக வழங்க விருப்பம் – 2024 இல் எதிர்பார்க்கலாம்

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website

சிங்கப்பூரில் 10 முதலாளிகளில் எட்டுக்கும் மேற்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளத்தை போனஸ் தொகையாக வழங்க விரும்புவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வேலைக்கு ஆள் எடுக்கும் நிலை அடுத்த ஆண்டு மந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் முதலாளிகள் போனஸ் வழங்க விருப்பம் கூறினர்.

சிங்கப்பூரில் மீண்டும் சர்க்யூட் பிரேக்கர் எனும் அதிரடி திட்டமா..? – உண்மை என்ன?

ஆட்சேர்ப்பு நிறுவனமான சிங்கப்பூர் மேன்பவர் குரூப் சமீபத்திய காலாண்டு வேலைவாய்ப்புக் கண்ணோட்ட ஆய்வை இன்று (டிசம்பர் 12) வெளியிட்டது.

இதில் 525 முதலாளிகள் கலந்துகொண்டு விருப்பம் தெரிவித்தனர் என கூறப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள முதலாளிகள் சராசரியாக ஒரு மாத சம்பளத்திற்கும் அதிகமான தொகையை போனஸ் தொகையாக வழங்க விருப்பம் கூறினர்.

போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் மோட்டார் வாகனத் துறை சார்ந்த முதலாளிகள் குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளத்தின் சராசரி போனஸை வழங்க அதிக விருப்பம் தெரிவித்து முதலிடத்தில் உள்ளனர்.

அதாவது இந்தத் துறையில் உள்ள 97 சதவீத முதலாளிகள் அவ்வாறு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

பொதுவாக, பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஒரு மாத சம்பளத்திற்கும் கூடுதலான சராசரி போனஸ் தொகையை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 3 லிருந்து 5 சதவீதத்துக்குள் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன.

லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் – பயிற்சி பெறாத ஊழியரை பலியாக்கிய பொறியாளர்