சிங்கப்பூரில் மீண்டும் சர்க்யூட் பிரேக்கர் எனும் அதிரடி திட்டமா..? – உண்மை என்ன?

DPM lawrence Wong debunks circuit breaker rumours
(Photo: Tech in Asia)

சர்க்யூட் பிரேக்கர் எனும் அதிரடி திட்டம் மீண்டும் அமல்படுத்தப்போவது தொடர்பான வதந்திகள் இணையத்தில் தீயாக பரவியது.

இந்நிலையில், அது போன்ற செய்திகள் பொய்யானவை என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று (டிசம்பர் 11) ஃபேஸ்புக்கில் தெளிவுபடுத்தினார்.

லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் – பயிற்சி பெறாத ஊழியரை பலியாக்கிய பொறியாளர்

இவ்வாறான போலி செய்திகள் இணையத்தில் பரவுவது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

அதே போல வர்த்தக தயாரிப்புகளுக்கு அவர் ஒப்புதல் அளித்தது போல பரவும் deepfakes படங்களையும் நம்ப வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவை அனைத்தும் பொய்யானவை என்றும், இணையத்தில் விழிப்புடனும் இருப்போம் என்றும் அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டு, தொற்றுநோய்களின் ஆரம்ப நாட்களில் அதாவது தடுப்பூசிகள் எதுவும் கிடைக்காத சமயத்தில், ​​COVID-19 பரவுவதைத் தடுக்க சிங்கப்பூர் இரண்டு மாத சர்க்யூட் பிரேக்கர் திட்டத்தை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லா இலவச அனுமதி – பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்