இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லா இலவச அனுமதி – பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிடும் நாடுகள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணி Chennai airport customs restricts carrying sweets
Passengers in Chennai airport

இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விசா இல்லாத இலவச அனுமதிக்கான முன்மொழிதலை இந்தோனேசியா அறிவித்துள்ளது.

சுற்றுலா துறையை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை அதிகரிக்கவும், இந்தோனேசிய சுற்றுலாத் துறை மற்றும் பொருளாதார அமைச்சகம் திட்டம் தீட்டியுள்ளது.

லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் – பயிற்சி பெறாத ஊழியரை பலியாக்கிய பொறியாளர்

இந்த அறிவிப்பை இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா சலாஹுதீன் யூனோ கடந்த சனிக்கிழமை அன்று வெளியிட்டார்.

முன்னர் விசா இல்லா இலவச அனுமதி வழங்கப்பட்ட நாடுகள் அல்லாமல், அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 20 நாடுகளை அமைச்சகம் முன்மொழிந்தது.

“இந்த ஏற்பாடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

“இது பல மடங்கு மாற்றத்தை உருவாக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

20 நாடுகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை அடங்கும்.

இந்தியர்களுக்கு இலவச அனுமதியை மலேசியா முன்னர் அறிவித்தது.

சீன நாட்டு மக்களுக்கு இலவச அனுமதிக்கு சிங்கப்பூர் இணக்கம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் சீன நாட்டில் உள்ள அதிக அளவிலான மக்களை கருத்தில் கொண்டு சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு நாடுகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

 

லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் – பயிற்சி பெறாத ஊழியரை பலியாக்கிய பொறியாளர்