“86 வயது முதியவரைக் காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வரும் 86 வயது சீன முதியவரை பிப்ரவரி 6- ஆம் தேதி அன்று காலை 07.00 AM மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, ப்ளாக் 468 நார்த் பிரிட்ஜ் சாலையில் (Blk 468 North Bridge Road) காணப்பட்டுள்ளார். அப்போது, பச்சை நிறச் சட்டை (Light green shirt) மற்றும் கிரே நிற ஷார்ட்ஸை (Grey shorts) அணிந்திருந்துள்ளார்.

சிங்கப்பூரில் மாத வாடகை S$6,200 – உச்சத்தை தொடும் வாடகை

இவரை யாரேனும் பார்த்தாலோ (அல்லது) முதியவரைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” என்று பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிப்.14- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்!

மேலும், காணாமல் போன முதியவரின் புகைப்படத்தையும் சிங்கப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.